Header Ads

Breaking News
recent

பசுமையான நகர திட்டம் : தெரிவு செய்யப்பட்ட திருமலை உப்புவெளி பிரதேச சபை...


திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
பசுமையான நகரம் எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாணத்தின் முதலாவது செயலமர்வு நேற்று (15) திருகோணமலை ஜேக்கப் பார்க் விடுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு ஐரோப்பிய நிதி பங்களிப்புடன் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தினுடாக இவ் பசுமையான நகரம் வேலைத்திட்டத்தின் செலமர்வு திருகோணமலை பட்டினமும் சுழலும் பிரதேசசபை தவிசாளர் ஆர்.ஏ.டி.எஸ்.டி.ரத்நாயக்க அவர்களின் தலைமையில் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் கிழக்கு மாகாண திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷமீர் சாலிஹ் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றது

இந்நிகழ்வு ஐரோப்பிய நிதி பங்களிப்புடன் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றங்களின் இயலுமையினை கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்திகிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் பசுமை நகர மாபெரும் நிகழ்ச்சி திட்டதிற்கு திருகோணமலை பட்டினமும் சுழலும் பிரதேச சபை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் கிழக்கு மாகாண திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷமீர் சாலிஹ் தெரிவித்தார்

அதன் முதலாவது செயலமர்வு நேற்று நடைபெற்றதாகவும் இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட நிறுவனம் தங்களுடைய பங்காளி நிறுவனமான இ.எம்.என்.கன்சல்டன்ஸ் மற்றும் ஏனைய திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் இவ் பசுமையான நகரம் வேலைத்திட்டத்தின் செலமர்வில் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை வழங்கியதாகவும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் கிழக்கு மாகாண திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷமீர் சாலிஹ் தெரிவித்தார்

எதிர்வரும் காலங்களில் இவ் திருகோணமலை பட்டினமும் சுழலும் பிரதேசசபையின் பெரும்திட்டத்தின் வரைபு இவ் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் இன்றைய கலந்துரையாடலின் பின்னர் எடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அந்தப் பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட நிறுவனத்தினால் அந்த திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகளும் மற்றும் குறிப்பிட்டளவான நிதிப் பங்களிப்பு வழங்கப்படும் என ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் கிழக்கு மாகாண திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷமீர் சாலிஹ் தெரிவித்தார்

மேலும் பட்டினமும் சுழலும் பிரதேசசபை தவிசாளர் கருத்து தெரிவிக்கும் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளுராட்சி மன்றங்களில் எமது பிரதேசசபை இவ் பசுமையான நகரம் வேலைத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டமை மகிழ்ச்சியான தருணம் எனவும் இவ்வாறு ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் எமது பிரதேசம் பசுமையான நகரம் வேலைத்திட்டத்தில் எமது பூரண ஒத்துழைப்பை வழங்கும் நோக்கில் அரச அரசசார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து இவ்வேலைத்திட்டத்தினை சிறப்பாக முன்னெடுத்து செல்ல முடியும் என திருகோணமலை பட்டினமும் சுழலும் பிரதேசசபை தவிசாளர் ஆர்.ஏ.டி.எஸ்.டி.ரத்நாயக்க தெரிவித்தார்

மேலும் இவ் செயளமர்வில் திருகோணமலை பட்டினமும் சுழலும் பிரதேசசபை உப தவிசாளர் முகம்மட் நௌபர்,செயலாளர் யாழினி,பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Powered by Blogger.