கிண்ணியா பொலிசாரின் அதிரடி : கிண்ணியா ஆர்ப்பாட்டத்தில் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பிரதான சந்தேக நபர்கள் இருவர் கைது..
திருகோணமலை அப்துல்சலாம் யாசீம்
கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவைப் படகு விபத்தின் போது வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பிரதான சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 23ஆம் திகதி கிண்ணியா குறிஞ்சாக்கேணி இழுவை படகு கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் அங்குள்ள இளைஞர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், ஊடகவியலாளர்களை தாக்கியதுடன் அவர்களின் கையடக்கத் தொலைபேசிகளையும் திருடிச் சென்றனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் கிண்ணியா பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இதன்போது வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதுடன் அரச சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.
இது தொடர்பில் கிண்ணியா பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் இதன் பிரதான சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 30 வயதுடைய வர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று (10) திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.