சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு ஒன்று கூடல் நிகழ்வு : ஆளுநரின் செயலாளர் இடம் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றையும் கையளிப்பு...
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மூவின மக்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து, திருகோணமலை சர்வோதய வளாகத்தில் ஒன்று கூடல் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்ததுடன் திருக்கோணமலை சர்வோதய வளாகத்திலிருந்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை பேரணியொன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது மக்கள் எதிர்நோக்கும், காணி, விவசாயிகளின் பிரச்சினைகள், அத்தியாவசிய பொருட்களுக்கான விலைவாசி அதிகரிப்பு, மாற்றுத்திறனாளிகள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள், கல்வி, சிறுவர், பெண்கள் உரிமைகள் போன்ற விடயங்கள் தொடர்பிலான கருத்துப் பகிர்வுகள் இதன்போது இடம்பெற்றது.
மனித உரிமை ஆணைகுழுவின் பிராந்திய இணைப்பாளர் லீனஸ் வசந்தராஜா, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் கோ. தனேஸ்வரன், தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரிபதி, திருக்கோணமலை வலய கல்வி பணிப்பாளர் ஶ்ரீதரன், சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், சட்டதரணிகள், பொதுமக்கள் என பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
பேரணியின் முடிவில் ஆளுநரின் செயலாளர் இடம் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றையும் கையளித்தனர்.