குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சுயதொழிலை ஆரம்பிப்பதற்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு...
திருகோணமலை கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சுயதொழிலை ஆரம்பிப்பதற்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது
நேற்று (15) கந்தளாய் பிரதேச செயலகத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கபில நுவன் அத்துகோரள அவர்களின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 'சமுர்த்தி அருணலு' வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வாறு கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சுயதொழிலை ஆரம்பிக்க தேவையான உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கபில நுவன் அத்துகோரள,கந்தளாய் பிரதேச சபையின் கௌரவ தலைவர் திரு.சமன் ஏகநாயக்க,கந்தளாய் பிரதேச செயலாளர் உட்பட சபை உறுப்பினர்கள் மற்றும் பயனாளி குடும்ப உறுப்பினர்களும் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.