Header Ads

Breaking News
recent

பட்டப்பகலில் அத்துமீறி சுவர் உடைப்பில் ஈடுபட்ட இருவரும் கைது...

அடடளைச்சேனை நிருபர்
அட்டாளைச்சேனையில்பொதுவில் கட்டப்பட்ட மதில் சுவரை அத்துமீறி இரண்டு இளைஞர்கள் உடைத்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பில் தெரிய வருவதாவது,

அட்டாளைச்சேனை பிரதான வீதி தபாற்கந்தோருக்கு முன்னால் உள்ள வீதியில் அமைந்துள்ள அண்மையில் தெஹிவளையில் காலம்சென்ற முன்னாள் இலங்கை வங்கி உத்தியோகத்தர் நசீரின் பொதுவில் கட்டப்பட்ட மதில் சுவரை பட்டப்பகலில் அத்துமீறி இந்த இரண்டு இளைஞர்களும் உடைத்துள்ளனர்.

இது சம்பந்தமாக பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய அக்கரைப்பற்று பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் இவர்களைக் கைது செய்து விளக்கறியலில் வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





Powered by Blogger.