Header Ads

Breaking News
recent

நாட்டின் தேசிய உற்பத்தியினை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்துடன் கைகோர்த்தது மலிபன்...

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
நாட்டின் தேசிய பால் உற்பத்தியினை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்துடன் கைகோர்த்து தேசிய உற்பத்தியினை ஊக்குவிக்கும் வகையில் பால் உற்பத்தியினை ஊக்குவிப்பதற்காக திரவபால் ஒன்றினை அறிமுகம் செய்தது மலிபன் நிறுவனம்

அதன் அறிமுக நிகழ்வாக பிராந்திய மட்டத்தில் கடந்த (11) திருகோணமலை அலஸ்தோட்டம் சி லகூன் பீச் ஹோட்டலில் இவ் மலிபன் திரவப்பால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது

இவ்வேளை திட்டம் நாட்டின் தேசிய உற்பத்தியில் பால் பண்ணையாளர்கள் மற்றும் கிராம மட்டத்தில் பால் உற்பத்தியினை ஊக்குவிப்பதட்க்கும் ''மலிபன் அபேயதான'' வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியின் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு இதுவரை 2490க்கும் அதிகமான பசுக்களை வழங்கி கிராமிய மட்டத்தில் இவ் பால் உற்பத்தியினை ஊக்குவித்து வருகின்றது

அதன் ஆரம்பக்கட்டமாக ''மலிபன் பசும்பால்'' எனும் பெயரில் திரவப்பால் ஒன்றினை பிராந்தியமட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான வணிக மேம்பாட்டு முகாமையாளர் ஜே.பிரதீபன் அவர்களின் தலைமையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் மெலிபன் பால் மா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளினால் ஸூம் தொல்நூட்பத்தினுடாக வடக்கு கிழக்கு விற்பனை பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன்

இவ் அறிமுக விழாவில் மலிபன் பால்மா நிறுவனத்தின் வடக்கு கிழக்கு மாகாண வணிக மேம்பாட்டு முகாமையாளர் ஜே.பிரதீபன்,கிழக்கு மாகாண பிராந்திய விற்பனை நிர்வாகி எம்.ஆர்.எம்.பாயிஸ்,வடக்கு மாகாண பிராந்திய விற்பனை நிர்வாகி கருணாரத்ன கிரிஷாந்த,திருகோணமலை மாவட்ட மலிபன் விநியோகஸ்தர் பாவதீன் அப்துல் நஜீப் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண அனைத்து விற்பனை பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.













Powered by Blogger.