Header Ads

Breaking News
recent

வயலில் மாடு மேய்ந்ததினால் தாக்கப்பட்ட மாடு உரிமையாளர்...



திருகோணமலை அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை- நொச்சிக்குளம் ஜின்னாநகர் பகுதியில் வயலுக்குள் மாடு சென்று வேளாண்மை உட்கொண்டதால் மாட்டு உரிமையாளரான பெண்ணொருவருக்கு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று (14)மாலை இடம்பெற்றுள்ளது.

நொச்சிகுளம் ஜின்னாநகர் பகுதியில் தன்னுடைய மாடு வயலுக்குள் சென்று வேளாண்மை உட்கொண்டதாக தெரிவித்து தன்னை தாக்கியதாக அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணொருவர் மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

திருகோணமலை-ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த அபூபக்கர் ரபீக் என்பவரே தன்னை தாக்கியதாகவும் தனக்கு நீதியைப் பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இத்தாக்குதலில் காயமடைந்த பெண் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சித்தி பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.