இலங்கைக்கு மறைமுக எச்சரக்கை விடுத்ததா அமெரிக்கா? பயங்கரத்தை நோக்கி இலங்கையின் எதிர்காலம்!!!
(பேருவளை ஹில்மி)
அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேசத்திற்கான ஜனநாயக நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு இலங்கைக்கு அழைப்பு விடுப்பதை அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக நிராகரித்தது.
இது சர்வதேசரீதியில் இலங்கையின் மதிப்பை தரக்குறைவு செய்வதோடு இலங்கை நாட்டுக்கான சர்வதேச சவாலாகவும், இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளுக்கு ஒரு மறைமுகமான அறிவிப்பாகவும் எச்சரிக்கையாகவுமே கருதவேண்டியுள்ளது.
அமெரிக்காவின் அரச தலைவர் மாளிகையிலிருந்து இணையதளம் மூலம் நடத்தப்பட்ட மாநாட்டில், அமெரிக்காவின் முக்கிய அரச பிரதிநிதிகள் சேனட் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கைக்கு இந்த மாநாட்டுக்கான அழைப்பு விடுக்கப்படாமையானது ஏற்கனவே பொருளாதார ரீதியில் பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ள இலங்கைக்கு, சர்வதேச ரீதியில் மிகப்பெரிய அவமானமும் பலத்த அடியுமாகும்.
இம் மாநாட்டில் உரை நிகழ்த்திய அமெரிக்கா அரச தலைவர் உலக ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், உலக ரீதியில் ஜனநாயகத்தை மீட்க துணியும் ஊடங்கள் மற்றும் அமைப்புக்கள் சக்திகளுக்கான உதவித்தொகையாக 424 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதாகவும் அறிவித்தார்.
அமெரிக்கா அரச தலைவரின் இவ் அறிவிப்பானது, இலங்கை ஜனநாயகம் சம்பந்தமாக சர்வதேசத்துக்கு சமிக்கை விடுத்திருக்கும் நிலையிலும், ஏற்கனவே இலங்கைக்கான சர்வதேச உதவிகளில் கேள்விக்குறியாக இருக்கும் நிலையிலும், வீழ்ந்து கிடக்கும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு மற்றுமொரு பலத்த அடியாகவே கருதவேண்டியுள்ளது.
மேலும் அமெரிக்காவின் இந்த அறிவிப்பானது மறை முகமாக சீனா, ரஷ்யா போன்ற வல்லரசுகளை குறிவைத்தாலும் இலங்கையின் ஜனநாயகம் சம்பந்தமாக அமெரிக்கா கொண்டுள்ள நிலைப்பாடும், மாநாட்டிற்கான நிராகரிப்பும், சர்வதேச சர்வதேசம் அமெரிக்காவின் தயவுக்கும், ஆதிக்கத்திற்கும் அடிபணிந்த நிலையில், அமெரிக்காவின் இவ் அரிவிப்பு இலங்கைக்கு உதவும் நாடுகள் ரீதியில் இலங்கைக்கான ஒரு சவாலான கேள்விக் குறியாகே நோக்க வேண்டியுள்ளது.