Header Ads

Breaking News
recent

தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் கன்னி அமர்வு திருமலையில்....

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் முதலாவது மக்கள் சந்திப்பு மற்றும் கன்னி அமர்வு திருகோணமலையில் இடம்பெற்றது

இன்று (26) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் வடக்கு கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி க.சுகாஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது

தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதான நோக்கமாக வடக்கு கிழக்கு மாகாண தமிழர்களின் அரசியல் தேவைகளுக்கு அப்பால் சட்டரீதியான தேவைகளை பூர்த்தி செய்வது அடிப்படை மனித உரிமை மீறல்களை கண்காணித்து அதட்கான தீர்வினை பெற்றுக்கொடுத்து என்பது இவ்வமைப்பின் பிரதான நோக்கம் என தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி டி.ஜி டியூக் தெரிவித்தார்

மேலும் இவ்வமைப்பு எவ்வித அரசியல் இலாபத்திற்காகவும் இயங்கவில்லை எனவும் மக்களின் சட்டரீதியான பிரச்சனைகளை தெளிவூட்டும் முழு நோக்காகவும் கொண்டு செயற்படும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்

உதாரணமாக வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களின் பிரச்சனைகள் என கருதும் போது அடிப்படை மனித உரிமை மீறல் பிரச்சனைகள் தொடர்பாகவும் மக்களின் காணி ஏனைய சட்டரீதியான அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பதற்கான ஒரு தெளிவூட்டல் மையமாக இது இயங்கும் எனவும் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது

இன்றைய முதலாவது கன்னி அமர்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பொது மக்களின் சார்பாக 35க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இவ் கன்னியமர்வில் கலந்து கொண்டதுடன் திருகோணமலை மாவத்தத்திலுள்ள தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சனைகள் இதன் போது ஆராயப்பட்டதாக தமிழர் உரிமைகள் கண்காணிப்பகத்தின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி ஏ ஜி டியூக் தெரிவித்தார்

மேலும் அமைப்பில் வடகிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு சட்டத்தரணி வீதம் இணைப்பாளராக இணைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய நிகழ்வில் திருகோணமலை மாவட்ட தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன்

தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் இதுதொடர்பில் தெளிவூட்டல்கள் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.











Powered by Blogger.