Header Ads

Breaking News
recent

தடம்புரண்ட புகையிரதம் : மட்டு புகையிரத சேவை ரத்து....

கெக்கிராவை முஆத் மர்சூக்
கொழும்பிலிருந்து திருகோணமலை பிறிமா மா ஆலையினை நோக்கிச் சென்ற சரக்குப் புகையிரதம் தடம்புரண்டுள்ள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்

இவ்வாறு தடம்புரண்ட சரக்குப் புகையிரதம் கொழும்பிலிருந்து திருகோணமலை பிறிமா மா ஆலையினை நோக்கிச் செல்லும் வழியில் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இன்று (31) மாலை கெக்கிராவை கலாவவெ என்ற பிரதேசத்தில் தடம் புரண்டுள்ளதாகவும் இவ்விபத்தினால் இன்று இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படவிருந்த இரவு கடுகதி பாடும்மீன் புகையிரத சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதம அதிபர் ஏ.பேரின்பராசா max தமிழ் செய்திசேவைக்கு தெரிவித்தார்

மேலும் குறித்த புகையிரத பாதை சீர் செய்யப்பட்டவுடன் மீண்டும் குறித்த புகையிரத சேவை இடம்பெறுமெனவும்

இவ்வாறு மட்டக்களப்பிலிருந்து இரவு 8.10 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து குறித்த பயணிகள் புகையிரதம் புறப்படுவது குறிப்பிடத்தக்கது.







Powered by Blogger.