Header Ads

Breaking News
recent

திருமலை புனித சூசையப்பர் கல்லூரி மாணவனுக்கு வெள்ளி பதக்கம்...



திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
தேசிய இளைஞர் மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் பங்குபற்றிய திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் மாணவன் வெள்ளி பதக்கம் வெற்றிபெற்றுள்ளார்

33வது தேசிய இளைஞர் மெய்வல்லுனர் விளையாட்டு விழா கடந்த 20,21,22 ம் திகதிகளில் கொழும்பு சுகததாச தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்றது.

தேசிய இளைஞர் மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் மாணவன் தேவமதுமிதன் குண்டு போடுதல் ;போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

வெள்ளிப் பதக்கத்தை வென்ற சாதனையாளன் தேவமதுமிதனுக்கும், பயிற்றுவிப்பாளர் சிவதீபனுக்கும் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி சமூகம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.