Header Ads

Breaking News
recent

திருகோணமலை சின்னம்பிள்ளைச்சேனை மண்கிண்டி குளம் அணைக்கட்டு அபிவிருத்தி ஆரம்பம்...

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
சின்னம்பிள்ளைச்சேனை மீனவர் சங்கம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தின் மூலம் சின்னம்பிள்ளைச்சேனை மண்கிண்டி குளத்தில் பல்லாயிரக்கணக்கான மீன் குஞ்சுகள் வளர்த்து வருவதாகவும் அக் குளதினை அபிவிருத்தி செய்து தருமாறு எழுத்துமூலமான கோரிக்கை விடுக்கப்பட்டுருந்தது.

இதனை கடந்த மாதம் நேரில் சென்று பார்வையிட்டதுடன் முதற்கட்டமாக மாரிமழை தொடங்கும் முன்பு அணைக்கட்டினை விரைவாக செய்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்தேன்

2021ம் ஆண்டின் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு அப்பகுதி சங்ககங்களின் பங்களிப்புடன் முதற் கட்டமாக மலை நீர் உடைத்து ஓடக்கூடிய குளத்தின் சில பகுதிக்கு அணைக்கட்டு ஜே சி பி இயந்திரத்தின் மூலம் செய்து கொடுக்கப்பட்டது.

இதன்பொழுது திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை கௌரவ உப தவிசாளர் முகம்மட் நௌபர் அவர்களுக்கு மீனவர் சங்கம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தினால் சின்னம்பிள்ளைச்சேனை கிராமத்தின் மிக நீண்டகாலமாக அபிவிருத்தி செய்யப்படாமல் இருந்த மண்கிண்டி குளத்தின் அணைக்கட்டு அபிவிருத்தி வேலையினை குறுகிய காலத்திலேயே செய்து கொடுத்தமைக்காக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டனர்.




Powered by Blogger.