Header Ads

Breaking News
recent

மாடு மேய்க்க சென்றவர் குளவிக்கூட்டுக்கு இலக்காகி மரணம்...



திருகோணமலை அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை-தென்னமரவாடி பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக புல்மோட்டை தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (02) காலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த கனகசபை குகநாதன் (69வயது) எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது அவரது வீட்டிலிருந்து மாடு பார்ப்பதற்காக சென்ற போது மரத்திலிருந்து குளவி கூடு கலைந்து குறித்த நபரை குத்தியதாகவும் இதனை அடுத்து புல்மோட்டை தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரின் சடலம் தற்போது புல்மோட்டை தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Powered by Blogger.