திருமலையின் கைக்குண்டு ஒன்று மீட்ப்பு...
திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உவர்மலை பகுதியில் கைக்குண்டொன்று இன்று (03) மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் பொலிசார் தெரிவித்தனர்.
உவர்மலை லோவர் வீதியிலுள்ள கடற்கரைக்கு அருகில் கைக்குண்டு ஒன்று இருப்பதாக தலைமை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த இடத்திற்கு பொலிசார் விரைந்தனர்.
இதனையடுத்து கைக்குண்டு இருப்பதை உறுதி செய்து திருகோணமலை நீதிமன்றில் பீ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதனை வெடிக்க வைப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இந்நிலையில் குறித்த கைக்குண்டை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடி படையினர் மீட்டதுடன் அதனை வெடிக்க வைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.