Header Ads

Breaking News
recent

திருகோணமலையிலும் பதிவான சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம்...

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணியா வெல்கம் விகார பகுதியில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று (02) இரவு இவ் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 10 மணியளவில் தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பினை செயல்படுத்திய போது குறித்தவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு அடுப்பினை செயற்படுத்தி விட்டு வெளியில் வந்து வேறு வேலை செய்து கொண்டிருந்த வேளைஅவர்களது சமையலறையில் சத்தம் ஒன்று கேட்டதாகவும் பின்னர் அங்கு சென்று பார்வையிட்டபோது குறித்த எரிவாயு அடுப்பு தீப்பற்றி சமயலரை புகை மூன்றாக காணப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்

பின்னர் மெதுவாக சமையல் எரிவாயு சிலிண்டரின் ரெக்குலெட்டர் பகுதியை கலட்டி தீயினை அனைத்தாகவும் தெரிவித்தனர்.




குறித்த எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவத்தின் போது எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை என்பதுடன்.

குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Powered by Blogger.