Header Ads

Breaking News
recent

கதிர்காமம் நோக்கி பயணித்த யாத்திரிகர்கள் பஸ் விபத்து...



அம்பாறை - பதியத்தலாவை பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதியை கைதுசெய்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Powered by Blogger.