"சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்." - தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கிவைப்பு...
நிலையான உலகை நோக்கியதான மாற்றுத் திறனாளிகளின் தலைமைத்துவமும், பங்கேற்பும் என்ற தொனிபொருளில் 2021ஆம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகள் தின நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது
கடந்த (03) வெள்ளிக்கிழமை திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி பிரதான மண்டபத்தில் உதவிக்கல்விப் பணிப்பாளர்- முறைசாராப் பிரிவு திரு. S.K. பிரபாகரன் அவர்களின் ஏற்பாட்டில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. S. சிறீதரன் அவர்களின் தலைமையின் நடைபெற்றது.
மேலும் குறித்த தினத்தில் 2019ஆம் ஆண்டு தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய விசேட தேவைப் பிரிவில் கற்கும் மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தது
அதன்படி திருகோணமலை மாதுமை அம்பாள் வித்தியாலய மாணவன் வரதகுமார் விதுசன் பரிதி வட்டம் எறிதல் போட்டியில் 1ஆம் இடம் பெற்றமைக்கும்,கலைமகள் மகா வித்தியாலய மாணவன் சாந்தகுமார் சஞ்சயன் பரிதி வட்டம் எறிதல் போட்டியில் 01ஆம் இடத்தினையும் 100 மீற்றர்ஓட்டபோட்டியில் 03ஆம் இடத்தினையும் பெற்றமைக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன்
கலைமகள் மகா வித்தியாலய விசேட தேவையுடைய மாணவன் ரவி அஸ்வின் பரிதி வட்டம் மற்றும் குண்டெறிதல் போட்டிகளில் 01ஆம் இடங்களை பெற்றதுடன் திருகோணமலை அல்-அஸ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின்மாணவன் முகம்மது ஆசிக் முகம்மது ராசித் பரிதி வட்டம் 100மீட்டர் ஓட்ட போட்டிகளில் 01ஆம் இடத்தினை பெற்றமைக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது
மேலும் விசேட தேவையுள்ள மாணவர்களின் கற்றல் இணைப்பாடவிதான செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக மாற்றுத் திறனாளிகள் தினத்தில் குறித்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்விற்கு திருகோணமலை வலயத்திலுள்ள பாடசாலகளில் கற்கும் 72 விசேட தேவையுடைய மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்ததுடன்
வலயக்கல்விப் பணிப்பாளர் அவர்களால் விசேட தேவையுடைய மாணவச் செல்வங்களுக்கு கற்றல் உபகரணங்கள், பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் இம் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களும், அவர்களை வழிநடாத்தும் அதிகாரிகளும் கௌரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.