Header Ads

Breaking News
recent

பரவும் காட்டுத் தீயால் 1,500 ஏக்கர் காடுகள் எரிந்து நாசம்!!!

அமெரிக்கா - கலிபோர்னியா மாகாணத்தின் மான்டேரி கவுண்டியில் கடும் குளிரான ஜனவரி மாத காலப்பகுதியில் முன்னோடி இல்லாதவாறு பெரும் காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தப் பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுவதுடன், நெடுஞ்சாலையை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

கொலராடோ தீ என அழைக்கப்படும் பிக் சுர் பசிபிக் கடற்கரையில் ஏற்பட்ட தீ, சுமார் 1,500 ஏக்கர் (607 ஹெக்டேர்) பரப்பளவை இதுவரை எரித்துள்ளது.

கலிபோர்னியாவின் மத்திய கடற்கரையைச் சுற்றியுள்ள 13 முகவரமைப்புக்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க அனுப்பப்பட்டதாக மூத்த வனவியல் மற்றும் தீ பாதுகாப்பு அதிகாரி மைக் மெடில்ஸ் கூறினார்.




Powered by Blogger.