Header Ads

Breaking News
recent

உள்ளுராட்சி மன்றங்கள்,சிவில் சமூகத்துடன் இணைத்த ஊடகவியாளர்களின் பங்களிப்பு தொடர்பில் செயலமர்வு திருமலையில் இடம்பெற்றது ...

ரவ்பீக் பாயிஸ்

கிழக்கு மாகாணத்தின் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கை உருவாக்கல் எனும் தலைப்பில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு திருகோணமலையில் இடம்பெற்றது




இன்று (23) திருகோணமலை நகர சபை பிரதான மண்டபத்தில் நடைபெற்ற இவ் செயலமர்வில் ஊடகத்துறை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எவ்வாறு தனது பங்கினை செலுத்துகின்றது செய்தி சேகரிப்பின் தன்மை மற்றும் செய்தி வழங்கும் தளம் தொடர்பில் இதன்போது தெளிவுப்படுத்தப்பட்டது




மேலும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக உள்ளூர் ஊடகவியலாளர்கள் , சிவில் சமூக அமைப்புகள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதன் மூலம் உண்மை தன்மை மற்றும் வெளிப்பாட்டுத் தன்மையை அதிகரிப்பத்தினை நோக்கமாக கொண்டு இச்செயலமர்வு இடம்பெற்றது




இச் செயலமர்வு அகம் மனித வள மேம்பாட்டு நிறுவனத்தின் ஏட்பாட்டில் இடம்பெற்றதுடன் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள்.அகம் நிறுவனத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.














Powered by Blogger.