Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : நேற்றைய தினம் 18பேர் அடையாளம்...



ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை நகரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

அந்த வகையில் நேற்று (27) காலை 8 மணி முதல் மாலை வரை திருகோணமலை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்

நேற்றைய தினம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் களத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதற்காக வருகைதந்த நோயாளிகளில் 72 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே 18 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது

அத்துடன் பொது இடங்களில் ஒன்று கூடுவது அதிக நெரிசலான இடங்களுக்கு செல்வத்தினை தவிர்த்து உரிய முறையில் முக கவசம் அணிந்து அரசாங்கத்தினால் வலியுறுத்தப்பட்டுள்ளது காதார நடைமுறைகளை பின்பற்றுமாறு இதன்போது கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.