திருமலை நகரை அண்டிய கடற்கரை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கம்பிகளை உரிய முறையில் பராமரிப்பு இல்ல : மக்கள் விசனம்...
திருகோணமலை நகரை அண்டிய பிரதான போக்குவரத்து வீதிகளில் கடலைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அரண் கம்பி வேலிகளை உரிய முறையில் பராமரிக்குமறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
திருகோணமலை கண்டி வீதி மட்டிகளி கடற்கரை முதல் திருகோணமலை கடற்படை முகாம் வரை கடற்கரையை சுற்றி உள்ள பிரதேசத்தை சூழ அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அரண் கம்பி வேலிகள் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் துருப்பிடித்தும் உடைந்தும் சில இடங்களில் களவாடப்பட்டு சென்றுள்ளதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
இவ்வாறு அமைக்கப்பட்ட பாதுகாப்பு அரண் கம்பி வேலிகள் இல்லாமையினால் பிரதான விதியினால் பிரதான போக்குவரத்து இடம்பெறுகின்றமையினால் விபத்துக்கள் ஏற்படும் பட்சத்தில் வாகனங்கள் கடலுக்குள் விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வாறு அமைக்கப்பட்ட பாதுகாப்பு அரண் கம்பி வேலியின் நடை பாதையின் ஊடாக அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் இளைஞ்ஞர் யுவதிகள் மாற்றுமல்லாது கட்பிணி தாய்மார்கள் வயோதிபர்கள் என பலர் நடைபயிற்சியில் ஈடுபடுவதாகவும் இதனால் தாம் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கின்றனர்
இந்த விதியானது வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் இவ்வாறு பாதுகாப்பு அரணாக அமைக்கப்பட்ட இரும்பு கம்பி வேலியானது உரிய முறையில் பராமரிப்பு இல்லாமையினால் துருப்பிடித்து உடைந்து விழுகின்ற நிலையிலும் சில கம்பி வேலிகள் காணாமல் போய் உள்ளதையும் எம்மால் அவதானிக்க கூடியதாக இருந்தது
எனவே இவ்வாறு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட கம்பிவேலியானது கடல் பிரதேசத்திற்கு உகந்த ஒரு பாதுகாப்பு அரண் இல்லையெனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை என்ற வகையில் இதனை உரிய முறையில் பராமரித்து இருந்தால் அனைத்து கம்பி வேலிகளை பாதுகாத்து இருக்க முடியும் எனவும் விதியினை அன்றாடம் பயன்படுத்தும் பிரதேச சபை அதிகாரிகள்,ஆளுநர் அலுவலக அதிகாரிகள்,சுங்க திணைக்கள அதிகாரிகள்,வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் இன்னும் பல அரச திணைக்கள அதிகாரிகள் பலரும் இவ் வீதியால் பயணிக்கும் நிலையில் இந்த பாதுகாப்பு அரண் கம்பி வேலிகளை புனரமைப்பதட்கோ,அல்லது பராமரிப்பதாட்கோ அல்லது மாற்று தீர்வினை நடைமுறை படுத்துவதட்க்கு வலியுறுத்தாமல் இருப்பதையிட்டு கவலை அடைவதாக புத்திஜீவிகள் கவலை தெரிவிக்கின்றனர்
மேலும் இவ்வித்தினால் திருகோணமலையின் இரண்டு பிரதான பாடசாலைமாணவர்கள் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.