Header Ads

Breaking News
recent

எந்நேரமும் தேர்தலை நடாத்த தயார் : மாகாணசபை தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழு

ரவ்பீக் பாயிஸ்
தேர்தல் ஒன்றினை நடாத்துவதற்கு எல்லை நிர்ணயம் ஒரு இடையூறாக அமையாது எனவும் என்னேரமும் தேர்தல் ஒன்றினை நடாத்த தயாராக உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

தேர்தல் ஒன்றினை எதிர்நோக்கும் போது முன்னேற்பாடாக செயற்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் இலங்கை பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவூட்டும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா அவர்களின் தலைமையில் இன்று (27) திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதான மண்டபத்தில் செயலமர்வு ஒன்று இடம்பெற்றது

இதன்போது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பங்கு முக்கியமானது எனவும் கடந்த கால தேர்தல்களின் போது இடம்பெற்ற வன்முறைகள் முறைப்பாடுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மற்றும் இனிவரும் தேர்தல்களில் போது அவ்வாறான முறைப்பாடுகளை தடுக்க பொலிசார் மேட்கொள்ளவேண்டிய திட்டம்,எதிர்நோக்கும் சவால்கள் அவ்வாறான சவால்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பங்களிப்பு எவ்வாறு இருக்கும் என்பதினை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா தெளிவுபடுத்தினார்

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தார்

கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பில் அமைச்சரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தல் பிற்போடப்பட்டபோதிலும் எந்த ஒரு நேரத்திலும் நடாத்துவதற்கு அவர்களுக்கு அதிகாரம் உண்டு எனவும் மாகாண சபையினை பொருத்தவரையில் மக்கள் பிரதிநிதிகள் மாத்திரம் இல்லை அனால் மாகாண சபையின் அனைத்து நிர்வாக செயற்ப்படுகளும் வழமை போல் இயங்கிக் இருக்கின்றது

மாகாணசபைக்கான நிதி ஒதுக்கீடுகள் உரிய முறையில் ஒதுக்கப்பட்ட கொண்டிருக்கின்றது இவ்வாறு இருக்கையில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் அரச அதிகாரிகளினால் இவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது இவ்வாறான ஒரு நிலைமைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு என்ற வகையில் உடன்பாடு இல்லை எனவும் அதனாலேயே மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு தாம் அடிக்கடி வலியுறுத்தி வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்தார்

மேலும் மாகாணசபைத் தேர்தல் ஒன்றினை நடாத்த எதிர்பார்த்திருக்கும் தருவாயில் அத்தேர்தலினை பழைய தேர்தல் பொறிமுறையிலா அல்லது புதிய தேர்தல் பொறிமுறையிலா தேர்தல் ஒன்றினை எதிர்கொள்ள நேரிடும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ புஞ்சிஹேவா இவ்வாறு பதில் அளித்தார்

1988 - 02ஆம் இலக்க மாகாண சபை தேர்தல் சட்ட மூலத்தின் பின்னர் 2007-17ஆம் இலக்க புதிய தேர்தல் திருத்தச் சட்ட மூலம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் அது முழுமையாக பூரண படுத்தப்படவில்லை எனவும் புதிய ஒரு தேர்தல் சட்டத்தினை பிரகடனப்படுத்திய போதிலும் பழைய தேர்தல் எல்லை நிர்ணய சட்டத்தி கீழ்தேர்தல் ஒன்றினை நடத்த முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலை எட்டப்பட்டுள்ளதாகவும் இதுவே சட்ட ஆலோசகர்களின் நிலைப்பட்டாகவும் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ புஞ்சிஹேவா தெரிவித்தார்

இவ்வாறு இந்த எல்லை நிர்ணய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தினால் சிறிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு முடிவு ஒன்றை அறிவிக்க முடியும் அதாவது பழைய சட்டமூலம் அமுலாகும் வகையிலோ அல்லது புதிய சட்டமூலம் முழுமை அடையும் வரையில் பழைய சட்டமூலத்தை அமுலாக்க வேண்டும் என்ற அடிப்படையிலோ நாடாளுமன்றத்தில் புதிய திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் எல்லை நிர்ணயத்துக்கு அனுமதி பெற்று புதிய சட்டமூலத்தை அமுல்படுத்துவதற்கு அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும் எது எவ்வாறாயினும் இதுவே ஆணைக்குழுவின் கோரிக்கை மக்கள் பிரதிநிதிகள் இல்லாமையினால் புதிய முறையில் நடத்துவதா அல்லது பழைய முறையில் நடத்துவதா என்ற தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்க முடியாது அது எவ்வாறாயினும் இந்த புதிய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு நாடாளுமன்ற அனுமதி தற்போதுள்ள கட்டாய கடப்பாடாக உள்ளது எனவும் புதிய முறையோ பழைய முறையோ ஏதாவது ஒரு முறைக்கு நாடாளுமன்றில் அனுமதி கிடைத்தால் தேர்தலை என்னேரமும் நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேரடியாகக் கிடைக்கும் எனவும் திருத்தங்களை மேற்கொண்டு அதற்கு அனுமதி கிடைத்தால் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த ஆணைக்குழு தயாராக இருப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்தார்

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரள தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான எஸ்.பி திவரத்ன,கே.பி.பி பத்திரன,மேலதிக ஆணையர் பி.பி.சி குலரத்ன,ஆணைக்குழுவின் திட்டமிடல் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் சன்ன பி.டி சில்வா திருகோணமலை மாவட்டத்தின் உயர் பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Powered by Blogger.