Header Ads

Breaking News
recent

திருமலையில் தந்திரமான முறையில் வர்த்தக நிலையம் உடைத்து திருட்டு...



 (ரவ்பீக் பாயிஸ்)

 திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை-கண்டி பிரதான வீதி ஆண்டாங்குளம் பகுதியில் வர்த்தக நிலையம் சூட்சுமமான முறையில் உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று(16) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வர்த்தக நிலையத்தை சுற்றி பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட இரும்பு கம்பி வலையினை சுபிட்சமான முறையில் வெட்டப்பட்டு கதவும் உடைக்கப்பட்டு உள்நுழைய பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 

வர்த்தக நிலையத்தில் சிகரெட் மற்றும் பணம் போன்றவைகள் திருடப்பட்டுள்ளதாகவும் கடை உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிசாரின் உதவியுடன் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது 

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










Powered by Blogger.