Header Ads

Breaking News
recent

திருமலையில் இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்பு...



 (அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை-சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைபறிச்சான் அம்மன் நகர் பகுதியில் பற்றைக் காட்டுக்குள் மோட்டார் குண்டுகள் இன்று (19) காலை மீட்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.


திருகோணமலை சர்தாபுர பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த இடத்துக்கு சென்று  மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.


மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகளை செயழிலக்க செய்வதற்கு மூதூர் நீதிமன்றத்தின் அறிக்கையை கோரியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Powered by Blogger.