Header Ads

Breaking News
recent

திருமலை ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு தகவல் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டது...

ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை மாவட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்குமான் செயலமர்வு ஒன்று இலங்கை தகவல் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டது

நேற்று (06) வியாழக்கிழமை திருகோமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட செயலாளர் அலுவலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் இலங்கை தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க அவர்களினால் நடாத்தப்பட்டது

இதன்போது மக்களுக்கு நல்ல பல தகவல்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக அரசாங்கத்தின் ஊடகத்துறை செயற்பாட்டை விஸ்தரிப்பதற்காக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் குறித்தும், அரசாங்கத்தினால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, வழங்கப்படவுள்ள விடயங்கள் குறித்தும் தெளிவு படுத்தப்பட்டிருந்தன.

மேலும் செய்தி சேகரிப்பென்ற பெயரில் பலர் அரசியல் இலாபத்திற்க்காக மாத்திரம் செய்தியினை பிரசுரிக்க நினைக்கின்றனர்

உதரணமாக ஒரு நிறுவனம் ஒன்று நாட்டின் திறக்க படுகின்றது என்றால் அந்த நிறுவனத்தினை திறந்து வைப்பவர் பற்றியது அல்ல செய்தி அந்நிறுவனம் எங்கு,எவ்வளவு மதிப்பில்,அந்நிறுவனத்தின் உற்பத்தி தொடர்பில் மற்றும் அந்நிறுவனத்தினால் அப்பிரதேசத்தில் ஏற்படுக்கின்ற மற்றம் தொடர்பில் வெளியிடப்படுவதே சரியான தரவுகளின் படி அது செய்தியாக கருதப்படுகின்றது என தெளிவுபடுத்தினார் இலங்கை தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க


இச் செயலமர்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் , முஸ்லிம் , சிங்கள மூவின ஊடகவியலாளர்களும் பங்கு பற்றியிருந்ததுடன்

இச் செயலமர்வில் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும,விரிவுரையாளராக இலங்கை தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க, திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கபில நுவான் அத்துகோரள, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராத யஹம்பத், மாவட்ட செயலாளர் சமன் தர்ஷன பாண்டிகோரல மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் அமைச்சர் ஆரியவதி கலப்பதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.




Powered by Blogger.