Header Ads

Breaking News
recent

மனப்பாங்கு கற்ப்பனை அடிப்படையிலன்றி தகவல் தரவுகள் அடிப்படையில் ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிட வேண்டும் : ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும...

ரவ்பீக் பாயிஸ்
மனப்பாங்கின் அடிப்படையில் கற்பனை அடிப்படையில் அன்றி தகவல்களின் அடிப்படையில் தரவுகளின் அடிப்படையில் ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிட வேண்டும் என ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (26) அரசாங்க வெளியீட்டு பணியகத்தினை திறந்து வைத்துவிட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

19 ஆவது 20வது நூற்றாண்டில் எரிபொருள் பெருமதியாக இருந்தது. ஆனாலும் 21 வது நூற்றாண்டில் தரவுகள் தகவல்கள் மிகவும் பெறுமதியானது எனவும் ஊடகவியலாளர்கள் தகவல்களையும்,தரவுகளையும் மிகவும் சீரான முறையில் சேகரித்த தகவல்களை வெளியிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உலகில் மிகப் பெரிய நிறுவனங்களை எடுத்துப் பாருங்கள் எப்போதும் சரியான தரவுகளை கொண்டுள்ளதாக இருக்கும்.அதேபோன்றுதான் ஊடகவியலாளர்கள் சரியான தகவல்களையும், தரவுகளையும் பெற்றுக் கொண்டு செய்திகளை வெளியிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நானும் ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் கடமையாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். ஏனென்றால் அந்த சம்பவம் எனது மரண வேளையில் கூட நினைவில் இருக்கும் என்பது கவலைக்குரிய ஒரு விடயம்!

இலங்கையின் முதலாவது எச்.ஐ.வி நோயாளி ஒருவர் இணங்க காணப்பட்ட காலப்பகுதியில் நான் எழுதிய செய்தியில் அவ்வாறு இனங்காணப்பட்ட எச்.ஐ.வி நோயாளியன் பெயரினை சுட்டிக்காட்டி இருந்தேன்.

எழுதப்பட்ட நாளிதழ் ஒன்றினால் பாதிக்கப்பட்ட குறித்த நோயாளியின் குடும்பம் பல விளைவுகள் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இதனால் என்மீது நிறுவனத்தின் மூலம் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டது எனவே செய்தி ஒன்றை பிரசுரிக்கும் முன்னர் அந்த செய்தி தனிப்பட்ட நபரை குறிக்கின்றதா எதிர்காலப் பிரச்சனைகள் ஏதும் ஏற்படுமா என தீர விசாரித்து அதன் பின்னர் அந்த செய்தியினை பிரசுரிப்பது என்பதே முக்கிய விடயமாகும் எனவும் ஊடக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துகோரள,கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத், தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.










Powered by Blogger.