அடையாளம் தெரியாத நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு..
பதுர்தீன் சியானா
ஹொரவபொத்தானை - நிக்கவெவ பகுதியை அண்மித்த காட்டுப் பகுதியில் பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இன்று (06) காலை இவ்வாறு பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது
55 வயதுக்கும் 60 வயதுக்கு இடைப்பட்ட பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன்
சம்பவ இடத்திற்கு குறித்த பெண்ணின் சடலத்தை பார்வையிடுவதற்கு நீதவான் வருகை தந்ததுடன் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்லுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவபொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.