Header Ads

Breaking News
recent

பிளாஸ்டிக் கழிவுகளினால் கடல் வளம் மற்றும் கடல்சார் உயிரினம் பெரிதும் பாதிப்பு : கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்...

ரவ்பீக் பாயிஸ் 
திருகோணமலை மாவட்டத்தை அண்டிய கடற்பரப்பில் பாரிய அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒதுங்குவதினால்் கடல் வளம் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார்


இன்று (26) திருகோணமலை நகரில் அமைந்துள்ள பிரதான கடற்கரையினை சிரமதானம் செய்யும் ஏற்பாட்டில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



திருகோணமலை மாவட்டத்தில் பருவமழை காலம் முடிவடைந்து வருகின்ற நிலையில் கடல் அலைகளினால் ஒதுக்கப்பட்ட கழிவுகளை சிரமதானம் செய்யும் நிகழ்வொன்று திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்து முப்படைகள் மற்றும் திருகோணமலை நகராட்சி மன்றம் இணைந்து இவ் சிரமதான பணியினை மேற்கொண்டிருந்தது


இன்றைய சிரமதானத்தில் கரையொதுங்கிய பெரும்பாலானது பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மீன்பிடி கழிவு உபகரணங்கள் இவ்வாறு கடலில் பொடப்படுவதினால்


கடல் வளம் மற்றும் மீனினங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் மீனவர்களின் வலைகளில் சிக்கி கொண்ட பல பிளாஸ்டிக் பொருட்கள் இவ்வாறு கரையொதுங்கி கடல் வளம் பெரிதும் பாதிக்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார்


மேலும் கடல் மற்றும் கடல் சார்ந்த பிரதேசங்களில் இவ்வாறு பிளாஸ்டிக் பொருட்களை போடுவது பாவமான செயல் எனவும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் எனவும் விசேடமாக மீனவர்களிடம் தாம் வேண்டிக் கொள்வது சற்று கவனமாக கடல் வளங்களை பயன்படுத்துமாறும் உங்கள் வாழ்வாதாரம் தங்கியிருப்பது கடலை நம்பி மாத்திரமே எனவே இவ்வாறு கடல் தொழிலினை நம்பி வாழும் நீங்கள் கடல் வளத்தினை பாதுகாப்பது உங்கள் கடமையாகும் என தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர்


இன்றைய தினம் சிரமதானத்திட்க்கு தெரிவு செய்த இடம் அன்றாடம் மீன்பிடியில் ஈடுபடும் ஒரு கடற்கரை பிரதேசமாகும் இப்பிரதேசத்தில் பாரியளவு பிளாஸ்டிக் மற்றும் மீன்பிடி உபகரண கழிவு பொருட்கள் ஒதுங்கியுளதினை அவதானிக்கக்கூடியதாக இருந்தது


மேலும் பல மீன்கள் இவ்வாறு பிளாஸ்டிக் பொழுதீனினால் உடம்பில் சிக்குண்டு கரையொதுங்கியுள்ளதை எம்மால் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது


எனவே நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் நாம் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் இவ்வாறான பிளாஸ்டிக் பொருட்களை கடலில் போடுவதற்கு எதிர்த்து செயல்பட வேண்டும்


எனவே இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட சிரமதான செயற்பாட்டிற்கு ஏனையவர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கடலில் இவ்வாறான பிளாஸ்டிக் கழிவுகள் பொடப்படுவதினை முற்றாகத் தடுக்க வேண்டும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார்


இச் சிரமதான செயற்பாட்டிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முப்படை அதிகாரிகள் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








Powered by Blogger.