திருகோணமலையில் மாணவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு
ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலையில் ரோட்டரி கழகத்தினால் புதிய தலைமுறையினரின் வாழ்வியல் திட்டத்தின் கீழ் பல வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டதுஅதன் ஓர் அங்கமாக இன்று (26) திருகோணமலை இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரியில் திருகோணமலை ரோட்டரி கழக தலைவர் டி.அகிலன் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது
இத்திட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரி, திருகோணமலை கோபாலபுரம் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் குச்சவெளி விவேகானந்தா கல்லூரி ஆகிய மூன்று பாடசாலைகள் உள்வாங்கப்பட்டு அவ் மூன்று பாடசாலைகளின் 600 மாணவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு தொடர்ச்சியாக காலை உணவு வழங்கப்பட்டு வருவதுடன்
மேலும் இவ் மூன்று பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் அடங்கிய ஆயிரம் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் வறுமை கோட்டின் கீழ் வாழும் 80 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களும் வழங்கி வைக்கப்பட்டது
இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் என 519 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு இத் திட்டத்தினூடாக இவ் வாழ்வாதார உதவிகள் வைக்கப்பட்டது
மாணவர்களின் கல்வி அபிவிருத்தியினை மேம்படுத்தும் நோக்கில் இந்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன்
மேலும் இந்நிகழ்வில் ரோட்டரி கழக முன்னாள் தலைவரும் ரோட்டரி கழகத்தின் சேவைகள் திட்டத் தலைவர் எஸ். சிவசங்கர், கழகத்தின் முன்னாள் தலைவரும் கழகத்தின் ஆலோசகருமான திருமுகம், கழகத்தின் முன்னாள் தலைவரும் பொது நிர்வாக தலைவருமான வைத்தியர் இ.குணாளன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது