திருமலை மட்டு மாவட்ட பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு...
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 1950 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது
என்று இருபத்தி ஆறு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது
நாடளாவிய ரீதியில் 53 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை அரசு தொழிலில் உள்வாங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் நான்காவது கட்டமாக 1950 பட்டதாரி பயிலுனர்களை திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து உள்வாங்கப்பட்டு இன்றையதினம் 600 பேருக்கான நிரந்தர நியமனக் கடிதங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது
இவர்களுள் ஏனையவர்களுக்கான நியமனக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது
அரச துறையில் தொழில் கிடைப்பது நீங்கள் கொடுத்து வைத்திருக்கும் வரப்பிரசாதமாகும் என கிழக்கு மாகாண ஆளுனர் அனுராத யகம்பத் தெரிவித்தார்.
பட்டதாரிகள் அனைவருக்கும் நியமனம் வழங்க வேண்டும் என்ற நோக்கில் உங்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டில் பல பகுதிகளில் அரச நியமனங்களை கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வண்ணம் உள்ளது அவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றார்கள் என்று அனைவருக்கும் நியமனம் வழங்க முடியாத நிலையில் உள்ளோம்.
இவ்வாறான சூழ்நிலைகளில் உங்களுக்கு இவ் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது எனவோ நீங்கள் நியமனம் பெறுகின்ற இடங்களில் ஐந்து வருடங்களாவது நீங்கள் சேவை ஆற்ற வேண்டும் எனவும் பின்னர் இடமாற்றம் தொடர்பில் எவ்விதமான அழுத்தங்களும் கொடுக்க கூடாது எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் இதன்போது தெரிவித்தார்
மேலும் இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கபில நுவன் அத்துக்கோரள, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாகாணத்தின் அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.