Header Ads

Breaking News
recent

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு...

 



ரவ்பீக் பாயிஸ் 

திருகோணமலை மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது 

இன்று (21) வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள அவர்களின் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது 



ப்ளேஜ் ரீஸ்டோர் பவுண்டேஷன் அமைப்பினால் சமூகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு அங்கமாக திருகோணமலை மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும்குடும்பங்களுக்கு "பெண்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்" எனும் திட்டத்தின் ஊடாக வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது

இத்திட்டத்தின் முதல் கட்டமாக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 11 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கிவைக்கப்பட்டது 

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தில் முன்னரே தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு விடு தொழில் முயற்சியினை மென்மேலும் முன்னேற்றுவதற்கு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு ஆரம்ப கட்டமாக 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதி உதவி வைக்கப்பட்டது 

இதன்போது பெண்கள் மேம்பாட்டு திட்டத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான க. சூரியகுமாரி இவ்வாறு கருத்து தெரிவித்தார் 

திருகோணமலை மாவட்டத்தில் பின்தங்கிய கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு ஏற்கனவே தொழில் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டு பொருளாதாரரீதியாக தொழிலை வளர்த்துக் கொள்ள முடியாமல் இருக்கும் குடும்பங்களுக்கு முதல்கட்டமாக நான்கு லட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும்

மாவட்டத்தில் இவ்வாறான பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் பல தொழில் முயற்சிகள் இருந்தும் பொருளாதார ரீதியாக அதனை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் அவஸ்தைப்படுவதாகவும் அவ்வாறான பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு அரசாங்க ரீதியாகவும் தனியார் தொண்டு நிறுவனங்களும் பல செயற்திட்டங்கள் இருந்தபோதிலும் போதிய அளவு தெளிவு இல்லாமையினால் இவ்வாறு பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் பல வாழ்வில் பெரிதும் அவஸ்தை படுவதாகவும் அவ்வாறானவர்களை இனங்காணப்பட்டு உறிய ஊக்குவிப்பினை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார் 

மேலும் நாட்டில் ஏற்பட்ட கோவிட் 19 கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொருளாதார நெருக்கடியில் தாம் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் வியாபாரம் மந்த கதியில் இடம்பெற்று வருவதனால் தமது அன்றாட வாழ்க்கை செலவினை பெரிதும் சிரமப்பட்டு கொண்டு செல்வதாகவும் இவ்வாறு அரசாங்க மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டத்தின் ஊடாக தமது வாழ்வாதாரத்தினை முன்னெடுத்துச் செல்லக் கூடியதாக இருக்குமெனவும் தமது பிரதேசத்தில் பல பெண்கள் தொழில் வாய்ப்பு இல்லாமல் வீடுகளில் இருப்பதாகவும் இவ்வாறான நிதி உதவி செயற்பாட்டினால் தம்முடைய தொழிலும் மென்மேலும் வளரும் எனவும் பிரதேசத்திலுள்ள தொழில் வாய்ப்பற்ற பெண்களுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கக் கூடிய வாய்ப்பும் இதனூடாக கிடைக்கும் எனவும் இவ்வாறு பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு தொழில் முயற்சிக்காக வாழ்வாதார உதவி திட்டத்தை வழங்கி வைத்த ப்ளேஜ் ரீஸ்டோர் பவுண்டேஷன் அமைப்புக்கும் தாம் நன்றியை தெரிவிப்பதாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தின் தலைவி ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார் 

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிக்கோரள, திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சுவர்ணா தீபானி, ப்ளேஜ் ரீஸ்டோர் பவுண்டேஷன் அமைப்பின் பெண்கள் மேம்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் சூரியகுமாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














Powered by Blogger.