Header Ads

Breaking News
recent

புதுவருட அரச கடமைகளை ஆரம்பித்தல் மற்றும் சத்தியப்பிரமாண நிகழ்வு மாவட்ட செயலகத்தில் ஆரம்பம்....

ரவ்பீக் பாயிஸ்
2022ஆம் ஆண்டு புதுவருட அரச கடமைகளை ஆரம்பித்தல் மற்றும் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (03) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாடிகோராள அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

கடந்த இரண்டு வருட காலமாக நாட்டில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் நிலவிய கோவிட்-19 கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் உட்பட இலங்கையும் பல பாதிப்புக்களை எதிர்நோக்கியது. குறித்த இரண்டு வருட காலப்பகுதியில் இழந்த இழப்புக்களை மீள அடையும் நோக்கில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். நாட்டினுடைய பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான செயற்பாடுகள்

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதேச ரீதியாக அரச கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அரச அதிகாரிகள் என்ற அடிப்படையில் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்

களை அர்ப்பணிப்புடனும் செவ்வனே மக்கள் நலன் கருதி செயற்பட வேண்டிய தேவை காணப்படுவதாக இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மத தலைவர்கள்,மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,பிரிவுத்தலைவர்கள் மற்றும் சக உத்தியோகத்தர்களும் என பலரும் கலந்து கொண்டனர்.






Powered by Blogger.