Header Ads

Breaking News
recent

காத்தான்குடியில் முப்பெரும் விழா - பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ்...


புதிய காத்தான்குடி முஹைத்தீன் பெரிய ஜும்மா பள்ளிவாயலில் (மஸ்ஜித் அக்ஸா) முப்பெரும் விழா இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் கலந்து கொண்டார்.

குர்ஆன் மனனப்பிரிவில் முழுமையாக மனனம் செய்தவர்களுக்கும், குர்ஆன் அபிவிருத்திச் சங்கத்தினால் நடத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கும், ரமழான் காலப்பகுதியில் நடைபெற்ற மார்க்க விளக்க வகுப்புக்களில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசில்களும் கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ் அவர்களினால் வழங்கப்பட்டது.
Powered by Blogger.