Header Ads

Breaking News
recent

கல்முனை தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் நியமனம்...

கல்முனை தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நிந்தவூரினைச் சேர்ந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் பதவியுயர்வு பெற்று தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொன்டார்.

நிந்தவூரினைப் பிறப்பிடமாகக் கொன்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான அலியார் றபீக் பொலிஸ் சேவையில் கடந்த 33வருடங்களாக தன்னை பாதுகாப்புத் துறையில் அற்பணிப்புடன் சேவையாற்றிய நிருவாகத் துறையில் ஆழுமையுள்ள ஒருவராவார்.

இலங்கையின் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் இவர் நாட்டின் பல பாகங்களிலும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றியுள்ளதோடு நாட்டின் பல பொலிஸ் நிலையங்களில் பல முக்கிய பிரிவுகளில் பதவியமர்த்தப்பட்டு திறன்பட சேவையாற்றி பொலிஸ் உயர் அதிகாரிகளின் பாராட்டினையும் பெற்றுள்ளார்.

அந்த வகையில் தனது ஆரம்ப பொலிஸ் சேவையினை கொழும்பிலும் பின்னர் மொனறாகலை, தனமல் வில,வீரக்கொடையிலும் குறிப்பாக பயங்கரவாதம் தலைதூக்கிய அச்சந்தர்ப்பத்தில் தாய் நாட்டுக்காய் தன்னை அர்ப்பணித்து நாட்டின் பல பாகங்களிலும் கடமையாற்றியிருந்தார்.

அத்தோடு தங்கலையில் உப பொலிஸ் பரிசோதகராகவும் (SI) அதன் பின்னர் வெல்லவாயவில் பொலிஸ் பரிசோதகராக( IP)பதவி உயர்வு பெற்று அங்கு கடமையாற்றியதோடு பின்னர் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால்காஸிம்(MP) அவர்களது மெய்ப்பாதுகாவலராக எட்டு வருடங்கள் கடமையாற்றியதோடு இறுதியாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் கல்முனை நீதிமன்றத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

தனது சேவைக்காலத்தில் பொலிஸ் நிருவாகப் பிரிவில் கூடிய அனுபவம் வாய்ந்தவராக காணப்படுவதோடு

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் நிருவாகப்பிரிவு (Administrative Unit)பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய நிலையிலேயே

கடந்த 2020.05.08ம் திகதியன்று பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

பொலிஸ் சேவையில் சிறந்த ஆளுமையுள்ள நிருவாகியாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவையாற்றியதுடன் பொலீஸாருக்கும் மக்களுக்குமிடையே முன்மாதிரியான நல்லுறவைப் பேண வேண்டும் என்ற வகையில் நீண்ட காலமாக சிவில் சமூகத்திற்கு மத்தியில் பல முக்கிய கூட்டங்களில் இது தொடர்பிலான பல தெளிவுகளை வழங்கி மக்களுக்கு இதனை ஆற்றுப்படுத்தியிருந்தார்.

சட்டத்தினையும் கடமையினையும் மிக நேர்த்தியாக செய்து தனது அதிகாரத்திட்குட்பட்ட வகையில் மக்களுக்கு நீதியான முறையில் சேவையாற்றக் கூடிய இவர் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக பதவி உயர்வு பெறுவதையிட்டு சிவில் சமூகம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றது.

இவர் மர்ஹூமா சலுஹா உம்மா,அலியார்

தம்பதிகளின் ஐந்து சகோதரிகளுக்கு இரண்டாவது ஓர் ஆண் மகனுமாவார். கடமையில் கண்னியமும் கட்டுப்பாடுடனும் நடக்கூடியவராகவும் எப்போதும் மக்களுடன் நேர்மையாகவும் பண்பாக நடந்து கொள்வதோடு பொதுச் சிந்தனைமிக்க இவரது தன்னலமற்ற சேவை எமது பிரதேசத்திற்கும் முழு நாட்டிற்கும் சென்றடைய மனதார வாழ்த்துகின்றோம்.

குறிப்பாக கோவிட் காலப் பகுதியில் இவரது சேவை மிக அளப்பரியது.




Powered by Blogger.