Header Ads

Breaking News
recent

மீனவ குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு...


ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மீனவ குடும்பங்கள் மற்றும் கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது

திருகோணமலை பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் அமைந்துள்ள திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழு அலுவலகத்தில் இன்று (29) திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் தயானந்த ஜெயவீர அவர்களின் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது

திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழு ஆரம்பிக்கப்பட்டு 10ஆவது ஆண்டு நிறைவையொட்டி திருகோணமலை மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மீனவ குடும்பங்கள் மற்றும் கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் உலர் உணவு பொதிகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது

இந்நிகழ்வில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பி.தனேஷ்வரன் இலங்கை மீன்பிடி திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எ.சஞ்சீவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்குபற்றியதுடன்


திருகோணமலை மாவட்டத்தில் மூவின மக்களையும் ஒன்று திரட்டி பாரபட்சமின்றி செயற்படும் அரசசார்பற்ற நிறுவனமாக ஓய்வு பெற்ற அதிகாரிகளினால் உருவாக்கப்பட்ட பிரஜைகள் குழு பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளது


அவற்றுள் ஒன்றாக நாட்டில் ஏற்பட்ட கோவிட் - 19 அசாதாரண சூழ்நிலையின் போது 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்களை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன்,தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்ட காலத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் பல குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக நிவாரணப் பணியில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது

மேலும் இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் மீனவ குடும்பங்கள் தமது நன்றியினையும் தெரிவித்திருந்தனர்.



















Powered by Blogger.