Header Ads

Breaking News
recent

கொரோனா தப்புப்பூசிக்கு ஒருவயது பூர்த்தி : கிழக்கு மாகாண சுகாதர திணைக்களத்தில் ஓராண்டு விழா -கிழக்கில் நடப்பு மாதத்தில் 2500 கொரோனா நோயாளிகள் 25 மரணங்களும் பதிவு : எ.ஆர்.எம்.தௌபீக்...

ரவ்பீக் பாயிஸ்
கிழக்கில் இனங்காணப்படும் கொரோனா நோயாளிகளில் பெரும்பாலானவர்களுக்கு ஓமிக்ரோன் தோற்று இருக்கலாம் எனவும் நடப்பு மாதத்தில் 2500புதிய கொரோனா நோயாளிகள் இங்கனப்பட்டுள்ளதாகவும் 25 மரணங்கள் பதிவாகியுள்ளதாவும் தொற்றுக்குள்ளானவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 40 கர்ப்பிணி தாய்மார்கள் புதிய கொரோனா நோயாளிகளாக இனம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தெரிவித்தார்

கொரோனா தடுப்பு மருந்து ஏற்றும் பணிக்கு ஓர் ஆண்டு நிறைவை ஒட்டி திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். தௌபீக் தலைமையில் சமய அனுஸ்டானங்களுடன் ஓராண்டு விழா நடைபெற்றது

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதி நாட்டில் முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தி கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக அரச தலைவர்களுடன் இணைந்து

அயராது உழைத்த முப்படையினர்,சுகாதார திணைக்கள அதிகாரிகள் வைத்திய அதிகாரிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை கௌரவிக்கும் நோக்கில் இன்றைய தினம் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் கீழ் நாடு பூராகவும் ஓராண்டு நிறைவு நினைவு கூறப்பட்டது

கொவிட் தடுப்பூசி செழுத்தியதில் இலங்கை உலக நாடுகளின் தரப்படுத்தலில் முதல் ஆறு நாடுகளுல் இடம்பிடித்துள்ளதுடன்

இவ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக 25 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக இதன் போது சுட்டிக்காட்டினார்

எனவே நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினை முற்றாக கட்டுப்படுத்துவதற்கு நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் அனைவரும் கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும்

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான கொரோனா தடுப்பூசி தொடர்பில் போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருவதை தவிர்த்து மூன்றாவது தடுப்பூசி ஆக பைசர் தடுப்பூசியினை தவறாது பெற்றுக் கொள்ளுமாறும் இதன்போது கேட்டுக்கொண்டார்

நாட்டில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகளில் பெரும்பாலானவர்களுக்கு ஓமிக்ரோன் தோற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்தினால் வலியுறுத்தப்பட்டு வரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் தொடர்ச்சியாக முகக்கவசங்களை அணிந்து சமூக இடைவெளிகளை பேணி நாட்டில் இருந்து முற்றுமுழுதாக கொரோனா தொற்றினை இல்லாதொழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இதன்போது கோரிக்கை விடுத்திருந்தார்

இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரள, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எ.எச்.அன்சார், மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ்,

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜி.எம் கோஸ்தா, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பிரேமானந்த் மற்றும் ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள் சுகாதார பணிமனையின் அதிகாரிகள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.













Powered by Blogger.