வெகுசன ஊடக கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைப்பு...
வெகுசன ஊடக கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் திருகோணமலையில் இடம்பெற்றது
இன்று (25) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் அகம் மனிதாபிமான வல நிலையத்தின் அனுசரணையுடன் எழுத்தாணி கலை பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டு மட்டக்களப்பு மாவட்ட வொய்ஸ் ஒப் மீடியா ஊடக கல்வி நிறுவனத்தினால் இவ் கற்கைநெறி நடாத்தப்பட்டுருந்தது.
ஆறு மாத காலமாக கற்கை நெறியாக இடம்பெற்றிருந்த இவ் கற்கை நெறியினை திருகோணமலை மாவட்டத்தின் தமிழ் பேசும் இளைஞர்கள் 30 பேர் பங்குபற்றியிருந்தனர்
இவ்வாறு பங்குபற்றியவர்களில் 22 மாணவர்கள் கற்கை நெறியினை பூர்த்தி செய்து டிப்ளோமா சான்றிதழ் பெறுவதற்கு தகுதி பெற்றிருந்தனர்
இவ் கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்கள் செய்தி வாசித்தல்,வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், ஆய்வு கட்டுரை நிபுணர்கள், ஆவணப்படம் தயாரித்தல் மற்றும் குறும்படம் தயாரித்தல் போன்ற துறைகளில் விசேட தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விசேட சான்றிதழ்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது
இந்நிகழ்வில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் மற்றும் திருகோணமலை வலயக்கல்வி பணிப்பாளர் ஸ்ரீதரன் மற்றும் அகம் மனிதாபிமான வல நிலையத்தின் இணைப்பாளர் கண்டுமணி லவகுராசா, பிரதி இணைப்பாளர் அ.மதன்,திட்ட இணைப்பாளர் ந.அஞ்சலி தேவி மற்றும் எழுத்தாணி கழகத்தினுடைய தலைவர் வடமலை ராஜ்குமார் மற்றும் வொய்ஸ் ஒப் மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருள் சன்ஜீத் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது