Header Ads

Breaking News
recent

கந்தளாயில் நான்காவது  கேஸ் அடுப்பு  வெடிப்பு...

 


ரவ்பீக் பாயிஸ் 

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நான்காவது சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் இன்று(19)இடம்பெற்றுள்ளது.

கந்தளாய், இரண்டாம் குலனி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது 

சமையல் எரிவாயு அடுப்பில் சமைத்து கொண்டிருக்கும்போது திடீரென வெடிப்பு சத்தம் கேட்டதுடன் சமையல் எரிவாயு அடுப்பு தீப்பற்ற தொடங்கியது 

தீயை கட்டுப்படுத்துவதற்காக தண்ணீர் ஊற்றிய போது கட்டுப்படுத்த முடியாமல் கூடுதலாக தீ பரவ ஆரம்பித்தையடுத்து நீரில் நனைத்த சாக்கை கொண்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன்

இச்சம்பவத்தில் எவ்வித உயிர் சேதங்களும் ஏற்படவில்லையெனவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர் 

கந்தளாய் பிரதேசத்தில் ஏற்கனவே மூன்று இடங்களில் கேஸ் வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதுடன் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






Powered by Blogger.