Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் இடம்பெற்ற வருடாந்த தைப்பொங்கல் திருவிழா - படங்கள் இணைப்பு...

ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலையில் வெகு விமர்சையாக வருடாந்த தைப்பொங்கல் திருவிழா இடம்பெற்றது




திருகோணமலை நகர சபை வாகன தரிப்பிட வளாகத்தில் இராவன சேணை அமைப்பின் ஏற்பாட்டில் (30) தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

மரபுரிமை திங்கள் எனும் பெயரில் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட இத் தைப்பொங்கல் விழா கடந்த 2018ம் ஆண்டு தொடக்கம் ஜந்து வருடங்களாக தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.

இதன் போது கலை நிகழ்ச்சிகள் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் மற்றும் திருகோணமலையில் கண்டெடுக்கப்பட்ட மரபுரிமை படங்கள் காட்சிப் படுத்தப்பட்டதுடன்

மாணவர்களுக்கான கலை கலாச்சார போட்டிகளும் இடம்பெற்றது

இதன்போது கருத்து தெரிவித்த இராவன சேணை அமைப்பின் தலைவர் து.செந்தூரன்

இன்றைய தினம் தை பொங்கல் விழா பெரும் தங்களுக்கு மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதன் நோக்கம் தமிழ் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

மேலும் இந்நிகழ்வில் இராவன சேணை அமைப்பின் செயலாளர் க.துஷ்யந்தன்,முதன்மை விருந்தினராக சிவ பூமி அறக்கட்டளை யின் தலைவர் செஞ்சொற்செல்வர். கலாநிதி ஆறு.திருமுருகன், சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின் ஹவாாய் ஆதிவனம் ஆன்மீகச்சுடர் ரிஷிதொண்டுநாத சுவாமிகள் பீடுடை விருந்தினராக மூதூர் ஆதார வைைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணர் வைைத்தியர் இ.றோகன்குமார் மற்றும் திருகோணமலை மாவட்ட தொண்று நிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















Powered by Blogger.