Header Ads

Breaking News
recent

6 மாதங்களாக தேடப்பட்டு வந்த இளைஞன் கைது


வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு 6 மாதங்கள் தலைமறைவாகியிருந்த இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவிலைச் சேர்ந்த 22 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

"கோப்பாய், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற 6 வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேக நபர் 6 மாதங்களாகத் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில், பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தபட்டுள்ளார்.
Powered by Blogger.