இன்றைய 74வது சுதந்திர தினம் தமிழர்களின் கருப்பு நாள் : மரண சான்றிதழ் என்ற வார்த்தையை வன்மையாக கண்டிக்கின்றோம் - வலிந்து காணாமலக்கப்பட்டோர் சங்கம்...
இலங்கை நாட்டின் 74வது சுதந்திர தினத்தினை கொண்டாடிக் கொண்டிருக்கும் இலங்கை நாட்டின் தமிழர்களுக்கு இன்றைய நாள் ஒரு கருப்பு நாள் எனவும் அரசாங்கம் இனிமேல் மரண சான்றிதழ் வழங்குவோம் என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்க வேண்டும் எனவும் கையளிக்கப்பட்டு,கடத்தப்பட்டு,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது
திருகோணமலை அன்புவெளிபுரம் கையளிக்கப்பட்டு,கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் அலுவலகத்தில் இன்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சங்கத்தின் தலைவி ஜே.நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார்
இன்றைய தினம் நாட்டின் 74வது சுதந்திர தினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடி கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் இன்றைய நாளினை நாம் தமிழர்களுக்கான கருப்பு நாள் எனவும் இத்தனை வருடங்கள் கடந்தும் கையளிக்கப்பட்டு,கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரரின் தரவுகள் சரியாக வழங்கப்படாமையினையிட்டு கையளிக்கப்பட்டு,கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவினர்கள் என்ற வகையில் இந்த நாட்டில் எமக்கு எந்த ஒரு சுதந்திரமும் இல்லை எனவும்
தாங்கள் இன்றுவரை நிம்மதியாக இந்த நாட்டில் வாழ வில்லை எனவும் அரசாங்கத்தின் அழுத்தங்களின் காரணமாக அரச புலனாய்வு துறையினர்களின் இன்றுவரை பல கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டு,பின் தொடரப்பட்டு மற்றும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவித்த கையளிக்கப்பட்டு,கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி இன்றைய நாள் இலங்கைவாழ் தமிழர்களின் கருப்பு நாள் எனவும் தெரிவித்தார்
மேலும் நாட்டின் ஜனாதிபதி உட்பட அனைத்து அரசியல் தலைமைகளும் அரச அதிகாரிகளும் இவ்வாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஒவ்வொரு தீர்க்கமான கருத்துக்களும் தெரிவிக்காத நிலையில் ஆண்டுதோறும் தரவுகள் மாத்திரம் பெற்ற வண்ணம் இருக்கின்றார்கள் எனவும் அவ்வாறு பெறப்பட்ட தரவுகளுக்கு இதுவரை எந்த ஒரு தீர்வும் கிட்டாத நிலையில் நீதியமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்டு அங்கு ஊடகங்களுக்கு காணாமல் ஆக்கப்பட்டோர்ககான மரண சான்றிதழ்கள் வழங்குவதாக தெரிவித்த விடயத்தை இன்றைய சுதந்திர தினத்தில் தாம் வன்மையாக கண்டிப்பதாக கையளிக்கப்பட்டு,கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி தெரிவித்தார்
தமது உறவுகளுக்கு நீதி விசாரணை இல்லாமல் எவ்வாறுமரண சான்றிதழ் வழங்க முடியும் எமக்கு மரண சான்றிதழ் தேவையில்லை எனவும் அவர்களுக்கான சரியான ஒரு நீதி மாத்திரமே வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தினார்
ஜனாதிபதி கூறிய அதே வார்த்தையை மனப்பாடம் செய்துகொண்டு நீதியமைச்சர் மரண சான்றிதழ்கள் வழங்கப்படும் என்ற விடயத்தை கூறுவதை விட்டுவிட்டு இவ்வாறு கையளிக்கப்பட்டு,கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் சரியான ஆய்வுகளை மேற்கொண்டு எமக்கு சரியான நீதியை பெற்றுத்தர வேண்டும் எனவும் நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்த கையளிக்கப்பட்டு,கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி
நீதியமைச்சரின் குடும்பத்தினரோ அல்லது உறவினர்களோ இவ்வாறு கடத்தப்பட்டு அவர்களுக்கு நீதி கிடைக்காத பட்சத்தில் மரண சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றால் அவர் ஏற்றுக்கொள்வாரா?. என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி கேள்வி எழுப்பினார்
மேலும் இன்றைய சுதந்திர தின நாளில் கையளிக்கப்பட்டு,கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களது மரண சான்றிதழ்கள் வழங்கப்படும் என்ற வார்த்தையை இனிமேல் இந்த அரசாங்கம் பிரயோகிக்க வேண்டாம் எனவும் அதனை கையளிக்கப்பட்டு,கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் என்ற வகையில் தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் இதன்போது தெரிவித்தார்
அன்று 1948 ஆம் ஆண்டு வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இந்த நாடு இன்று இந்நாட்டில் வாழும் மக்களுக்கு எந்த ஒரு சுதந்திரமும் கிடைக்கவில்லை எனவும் நாட்டில் எமக்கு நடந்த அநீதிகளுக்கு ஜனநாயக முறையில் நீதி கேட்பது,பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் மற்றும் செயற்பாட்டு சுதந்திரமும் இல்லை என்றும்
இவ்வாறு இருக்கையில் நாம் எவ்வாறு இன்றைய சுதந்திர தினத்தை கொண்டாடுவது நாட்டு மக்கள் என்ற வகையில் இவ்வாறான அநீதிகள் இழைக்கப்படாமல் இருந்தால் நாட்டின் அனைத்து மக்களும் ஒன்றாக இந்த சுதந்திர தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடியிருக்கலாம் என திருகோணமலை தமிழர் சமூகத்தின் இணைப்பாளர் ஆர்.நிக்லஸ் தெரிவித்தார்
இன்றைய சுதந்திரத்தினத்தின் போது கையளிக்கப்பட்டு,கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அவர்களின் உறவுகளின் புகைப்படத்தினை தமது மாடிகளில் தாங்கியவாறு அமர்ந்து அமைதியான முறையில் தமது கவலையை வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.