Header Ads

Breaking News
recent

நீதிக்காக எங்களின் குரல் எனும் தொனிப்பொருளில் திருமலையில் செயளமர்வு..

ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலையில் நீதிக்காக எங்கள் குரல் எனும் தொனிப்பொருளில் பெண்களினால் முன்னெடுக்கப்படுகின்ற மனித உரிமைகள் மேன்பாட்டு திட்டம் தொடர்பான செயலமர்வொன்று இடம்பெற்றது


திருகோணமலை கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஜூப்லி மண்டபத்தில் இன்று (21) கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் மதிவண்ணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது


இவ் செயளமர்வு விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாசம்,அமரா பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் இளையோர் தன்னார்வ அமைப்பினரின் பங்கேற்புடன் இடம்பெற்றது


இந்நிகழ்வில் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள விசேட தேவை உடையவர்களுக்கான ஆற்றுபடுத்தல் மையம் திருகோணமலை மாவட்டத்தில் இல்லை எனவும் வைத்தியசாலைகளில் விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை மற்றும் அன்மையில் அரசினால் வழங்கப்பட்ட வேலை வாய்ப்பில் விசேட தேவை உடையவர்கள் அரசாங்கத்தினால் புறக்கணிக்க பட்டமை, மாற்று திறனாளிகளுக்கான ஒரு தனியான ஆனைக்குழு அமைக்கப்பட்டு அவர்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் எனபன நாட்டில் நிலவுகின்ற பாரபட்சம் தலைதூக்கியுளமை தொடர்பில் ஆய்வுகள் மூலம் சேகரிக்கப்பட்ட பிரச்சனைகள் அதற்கான தீர்வுகளும் அடங்கிய ஆய்வு அறிக்கை ஒனறு குறித்த அமைப்புகளினால் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் மதிவண்ணன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது


இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் மாவட்ட சமுக சேவைகள் உத்தியோகத்தர் சுகந்தினி விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் உறுப்பினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Powered by Blogger.