Header Ads

Breaking News
recent

திருமலையின் நீண்ட காலம் அபிவிருத்தி செய்யப்படாமல் இருந்த பல வீதிகள் புனரமைக்க வேலைகள் முன்னெடுப்பு...

ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்குற்ப்பட்ட பல வீதிகள் புனரமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்டது

அதன்படி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே அவர்களின் தலைமையில் இவ் வீதிகள் புனரமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (13) மட்க்கோ பிரதான வீதியில் இடம்பெற்றது


இவ்வாறு மட்க்கோ பிரதான வீதி ,முஹம்மதியா நகர் வீதி தொடக்கம் புதுக் குடியிருப்பு வீதி வரையிலான 4கிலோ மீட்டர் தூரம் வரை குறித்த வீதிகள் புனரமைக்கப்படவுள்ளதுடன்

கிராமிய வீதி மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்புகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பட்டணமும் சுழலும் பிரதேச சபை உறுப்பினர் ஜெய்னுதீன் துவான் பஹார்டீன் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க பிரதேச சபையின் தவிசாளர் ஆர்.ஏ.டீ.எஸ்.ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே அவர்களால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது


குறித்த வீதிகள் புனரமைப்பிற்காக சுமார் 126,460,605.07 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் இப்பிரதேச மக்கள் மற்றும் உள்ளூர் அரசியல் தலைமைகள் இவ் வீதி புனரமைப்பு சம்பந்தமாக பல அரசியல் வாதிகளினால் காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வந்த நிலையில் இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே அவர்கள் இவ் அபிவிருத்தி வேளையினை ஆரம்பித்து வைப்பது தொடர்பில் தாம் மிக்க நன்றியினை தெரிவித்துக்கொள்வதாகவும் குறித்த வீதியின் நிர்மாணப்பணிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபையினுடாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் ஜெய்னுதீன் துவான் பஹார்டீன் தெரிவித்தார்

மேலும் இந்நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினர்கள் கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Powered by Blogger.