கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
திருகோணமலையில் இயங்கி வரும் "நமக்காக நாம்" அமைப்பினால் திருகோணமலை வரோதயநகர் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த 28 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் திரு. குகன் அவர்களால் இவ் உதவிகள் வழங்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் இன மத வேறுபாடின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை தேடி வீடுகளுக்கு சென்று வழங்கி வருவதுடன் எதிர்காலத்தில் பாடசாலை செல்லாத மாணவர்களை ஊக்குவிப்பதற்கும் பல முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் நமக்காக நாம் அமைப்பினர் தெரிவித்தனர்.