திருமலை நகரை அண்டிய பெரும்பாலான தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின...
திருகோணமலை நகரை அண்டிய பெரும்பாலான தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு அதிகமாக தொடர்ச்சியாக பெய்து வந்த அடை மழை காரணமாக திருகோணமலை நகரை அண்டிய பெரும்பாலான தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது
அதன்படி திருகோணமலை நகரை அண்டிய துளசி புரம், அலஸ் தோட்டம், முகம்மதியா நகர் மற்றும் சிறிமாபுர போன்ற பிரதேசங்கள் அரை அடிக்கு மேல் மழைநீர் தேங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இவ்வாறு மழை நீர் தேங்கி உள்ள பிரதேசங்களில் மக்கள் தமது வீடுகளிலேயே பாதுகாப்பாக இருப்பதாகவும் குறித்த பிரதேசங்களில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை, கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேசத்தின் பெரும்பாலான தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் நேற்று இரவு முதல் தாம் அன்றாட வேலைகளை செய்ய முடியாது உரங்குவதட்கு மாற்று வழி இல்லாமல் பெரும் அவஸ்தைப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இருக்கையில் உரிய முறையில் வடிகாண்கள் அமைக்க படாமையினாலும் அமைக்கப்பட்ட வடிகாண்கள் உரிய முறையில் பராமரிப்பு இல்லாமையால் தாம் ஒவ்வொரு மழை காலங்களிலும் பெரும் அவஸ்தைப்படுவதாகவும் உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் கவணம் செலுத்துமாறும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.