கேரளா கஞ்சாவுடன் திருமலையில் சந்தேகநபரொருவர் கைது..
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-கப்பல் துறை பகுதியில் கேரளா கஞ்சா 1 கிலோ 680 கிரேமுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு (12) இடம்பெற்றுள்ளது.
சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் விற்பனை செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போதே கந்தளாய்- சூரியபுர விஷேட பொலிஸ் அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து சோதனையிட்டபோது குறித்த நபரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும் விஷேட பொலிஸ் அதிரடி படையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த டேவிட் சுசந்த குமார (38வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.