Header Ads

Breaking News
recent

கொலை சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது


மத்துகமவில் வீடொன்றுக்குள் நுழைந்து பெண்ணொருவரை சுட்டுக் கொன்ற சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத இருவர் மத்துகம பாலிகா வீதி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து பெண் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபரான பெண் நேற்றிரவு நுகேகொடையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

39 வயதான சந்தேக நபர் மத்துகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கொலைக்கு உதவிய மற்றும் சதி செய்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மத்துகம பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.