தனக்கு நிகழ்ந்த அநீதி தொடர்பில் தாக்கல் செய்த வழக்கினை மீண்டும் தொடர தீர்மானம் : சண்முக ஆசிரியை பஹ்மிதா...
ADMIN
திருகோணமலை சண்முக ஆசிரியை மீது இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் இரு தரப்பினரும் புரிந்துணர்வில் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட வழக்கினை மீண்டும் தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சண்முக ஆசிரியை பஹ்மிதா றமீஸ் தெரிவித்துள்ளார்
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்துக்கல்லூரியின் சர்ச்சை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேல்முறையீடு இன்று (07) மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் மனுதாரர் சார்பில் சட்டமாணி சுவஸ்திகா அருலிங்கம்
ஆஜராகியிருந்தார்
மனுதாரரின் அடிப்படை உரிமை மீறல்கள் தொடர்பில் நீண்ட தெளிவுக்கு பின்னர் தொடர்ந்தும் வழக்கினை முன்னெடுத்து செல்வதற்கான தேவையினை தெளிவுபடுத்தி எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம் திகதி மீண்டும் இவ்வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்கு நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மேலும் நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டமாணி இரு தரப்பினரின் புரிந்துணர்வின் அடிப்படையில் சுமுகமாக முடித்துக் கொள்ளப்பட்ட குறித்த வழக்கு கல்வி அமைச்சினால் அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின் அடிப்படையினை மையமாகக்கொண்டு மனுதாரர் அன்றைய தினம் பாடசாலைக்கு சமூகம் அளித்ததாகவும் தொடர்ச்சியாக மனுதாரர் அநீதிக்கு உட்படுத்தப்படும் விடயம் தொடர்பில் தெளிவாக மன்றில் தெளிவுபடுத்திய சட்டமாணி தொடர்ந்தும் குறித்த வழக்கினை சுமுகமான முறையில் கொண்டு செல்வதற்கான தீர்மானம் இல்லை எனவும் மனுதாரருக்கு சரியான நியாயமான தீர்ப்பினை பெரும் நோக்கில் வழக்கினை தொடர்ந்து முன்னோக்கி செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்
மேலும் மனுதாரர் சட்டத்திற்கு முரணான வகையில் ஸ்ரீ சண்முகா இந்துக் கல்லூரியிலிருந்து வலயக்கல்வி பணிமனை இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பிலும் மனுதாரரின் அடிப்படை உரிமைகள் தொடர்பிலும் மேலதிக நடவடிக்கைகளையும் குரல்கள் இயக்கம் முன்னெடுத்துச் செல்வதற்கு தயாராக உள்ளதாக குரல்கள் இயக்கத்தின் தவிசாளர் சட்டத்தரனி றாஸி முஹம்மட் ஜாபிர்
இதன்போது தொரிவித்தமை குறிப்பிடப்பட்டுள்ளது.