Header Ads

Breaking News
recent

கொழும்பு திருமலை அதிசொகுசு பயணிகள் பேருந்து விபத்து...


கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு பஸ்ஸொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த எட்டு பேர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து இன்று (26)அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து வந்து கொண்டிருந்த சொகுசு பஸ் கலேவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும் இதில் காயம் அடைந்த 8 பேர் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பிலான விசாரணைகளை கலேவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





Powered by Blogger.