75-வது சுதந்தரத்தினத்தை முன்னிட்டு மரநடுகை...
கெக்கிராவ கல்கிரியாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லியாகம பிரதேசத்தில் நாட்டின் 75-வது சுதந்திரத்தினத்தினை முன்னிட்டு மரநடுகை நிகழ்வொன்று இடம்பெற்றது
கெக்கிராவ நெல்லியாகம கிராம சேவகர் பிரிவு இலக்கம் 688ல் இவ் மர நடுகை நிகழ்ச்சி இன்று (25) வெள்ளிக்கிழமை பிற்பகல் 01:30 மணியளவில் ஜும்மா தொழுகைக்கு பின்னர் நெல்லியாகம ஜும்மா பள்ளிவாயலுக்கு முன்னாள் கல்கிரியாகம பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் குறித்த நிகழ்வு ஏற்ப்பாடு செய்யப்பட்டு சிறப்பாக இடம்பெற்றது
இந்நிகழ்வில் கல்கிரியாகம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

.jpeg)

.jpeg)
